ஆடிவேல் சக்திவேல் பவனி கதிர்காம கந்தன் ஆலயத்தில் இனிதே நிறைவு

ஆடிவேல் சக்திவேல் பவனி கதிர்காம கந்தன் ஆலயத்தில் இனிதே நிறைவு

ஆடிவேல் சக்திவேல் பவனி கதிர்காம கந்தன் ஆலயத்தில் இனிதே நிறைவு

எழுத்தாளர் Staff Writer

03 Aug, 2020 | 8:16 pm

Colombo (News 1st) வரையறுக்கப்பட்ட கெபிட்டல் மகாராஜா நிறுவனம் வருடாந்தம் நடத்தும் ஆடிவேல் சக்திவேல் பவனி இன்று (03) வரலாற்று சிறப்புமிக்க கதிர்காம கந்தன் ஆலயத்தில் இனிதே நிறைவுபெற்றது.

வரலாற்று சிறப்புமிக்க யாழ். தொண்டைமானாறு – செல்வச் சந்நிதி ஆலயத்தில் சிறப்பு பூஜை வழிபாடுகளுடன் நேற்று முன்தினம் ஆரம்பமான ஆடிவேல் சக்திவேல் பவனி இன்று கதிர்காமத்தை சென்றடைந்தது.

ஆறுபடை வீடுகளிலும் இலங்கையின் பல ஆலயங்களில் பூஜிக்கப்பட்ட வேலாயுதப் பெருமான் இன்று காலை செல்லக் கதிர்காமம் மாணிக்க விநாயகர் ஆலயத்திற்கு எழுந்தருளினார்.

பின்னர் வரலாற்று சிறப்புமிக்க கதிர்காமம் கந்தன் ஆலயத்தை நோக்கி சக்திவேல் பவனி இடம்பெற்றது.

நாட்டின் தற்போதைய நிலைமை காரணமாக சுகாதார அறிவுறுத்தல்ளுக்கு அமைவாக இம்முறை ஆடிவேல் சக்திவேல் பவனி இடம்பெற்றிருந்தது.

கதிர்காம கந்தன் வீற்றிருக்கும் ஆலயத்திற்குள் வேலாயுதப் பெருமான் எழுந்தருளி பூஜைகளை ஏற்றதுடன் இந்த ஆண்டுக்கான ஆடிவேல் சக்தி வேல் பவனி இனிதே நிறைவுபெற்றது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்