அங்கொட லொக்காவின் காணி வியாபாரம் தொடர்பில் வௌிக்கொணர்வு 

அங்கொட லொக்காவின் காணி வியாபாரம் தொடர்பில் வௌிக்கொணர்வு 

அங்கொட லொக்காவின் காணி வியாபாரம் தொடர்பில் வௌிக்கொணர்வு 

எழுத்தாளர் Staff Writer

03 Aug, 2020 | 4:02 pm

Colombo (News 1st) திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபட்ட அங்கொட லொக்காவுக்கு சொந்தமானவை என கூறப்படும் சில காணிகள் பொலிஸாரால் அடையாளம் காணப்பட்டுள்ளன.

அண்மையில் கைது செய்யப்பட்ட அங்கொட லொக்காவின் உதவியாளரான ‘செம்பு’ என அழைக்கப்படும் நாமுல ஆரச்சிகே சமன் குமாரவிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை அடிப்படையாகக் கொண்டு குறித்த சொத்துகள் அடையாளம் காணப்பட்டன.

929 பேர்ச்சஸ் காணியின் பெறுமதி 500 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

வெவ்வேறு தரப்பினருக்கு சொந்தமான குறித்த காணியை அங்கொட லொக்கா கட்டாயத்தின் பேரில் தமது பெயருக்கு பதிவு செய்துள்ளமை ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

பிரதி பொலிஸ் மா அதிபரின் ஆலோசனையின் பிரகாரம், விசாரணைகளை மேற்கொண்டு குறித்த காணியின் உரிமையாளர் யார் என்பது தொடர்பில் கண்டறியப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்