விக்டோரியாவில் தேசிய பேரிடர் நிலை பிரகடனம்

விக்டோரியாவில் தேசிய பேரிடர் நிலை பிரகடனம்

விக்டோரியாவில் தேசிய பேரிடர் நிலை பிரகடனம்

எழுத்தாளர் Chandrasekaram Chandravadani

02 Aug, 2020 | 3:45 pm

Colombo (News 1st) அவுஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்தில் இன்று (02) மாலை முதல் தேசிய பேரிடர் நிலை பிரகடனப்படுத்தப்படவுள்ளது.

மெல்போர்னின் மெட்ரோ நகர்ப்பகுதிகளில் வசிப்போர் இன்று மாலை 6 மணி முதல் வீடுகளில் இருந்து 5 கிலோமீற்றருக்கு மேற்பட்ட பகுதிகளுக்கு செல்தற்கான அனுமதி மறுக்கப்படவுள்ளது.

கொள்முதல் நடவடிக்கைகளுக்காக வீட்டில் ஒருவருக்கு மாத்திரமே அனுமதி வழங்கப்படவுள்ளது.

மேலும் உடற்பயிற்சிகளுக்கு நாளொன்றில் ஒரு மணித்தியாலத்துக்கு மாத்திரம் அனுமதி வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இரவு வேளையில் 8 மணி முதல் காலை 5 மணி வரை ஊரடங்கு அமுல்படுத்தப்படவுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்