வாக்களிப்பு நிலையங்களில் கொரோனா அபாயம் இல்லை – மஹிந்த தேசப்பிரிய

வாக்களிப்பு நிலையங்களில் கொரோனா அபாயம் இல்லை – மஹிந்த தேசப்பிரிய

வாக்களிப்பு நிலையங்களில் கொரோனா அபாயம் இல்லை – மஹிந்த தேசப்பிரிய

எழுத்தாளர் Staff Writer

02 Aug, 2020 | 2:41 pm

Colombo (News 1st) வாக்களிப்பு நிலையங்களில் கொரோனா அபாயம் ஏதும் இல்லை என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

எவ்வித அச்சமும் இன்றி மக்கள் தமது ஜனநாயக கடமையை நிறைவேற்றுமாறு ஆணைக்குழுவின் தலைவர், மக்களை கேட்டுக் கொண்டுள்ளார்.

உங்களின் வாக்குகளை உங்கள் விருப்பத்திற்கு அமையவே வழங்க வேண்டும். உங்களின் வாக்குகளை ஏனையவருக்கு வழங்க வேண்டும் என எவராலும் கட்டாயப்படுத்த முடியாது. உங்களின் வாக்கு, உங்களின் உரிமை, உங்களின் பொறுப்பாகும். உங்களின் எதிர்காலமாகும், அதனால் தயவுசெய்து வாக்களிக்க வாருங்கள், வாக்களியுங்கள், எமது வாக்களிப்பு நிலையங்கள் நூறு வீதம், கொரோனா தொற்று நீக்கப்பட்டுள்ளது. வாக்களிப்பு நிலையங்களில் தொற்று இல்லை என்பதை நாம் நூறு வீதம் உறுதிப்படுத்துகின்றோம். மீற்றர் தூரம் இடைவௌி பேணப்படுகின்றது. அதிகாரிகள் முகக்கவசங்களை அணிந்து கடமையில் ஈடுபடுகின்றனர். அதனால் வாக்களிப்பு நிலையங்களுக்கு வந்து வாக்களியுங்கள். சரியாக வாக்களிப்பை பதிவு செய்யுங்கள்

என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் விளக்கமளித்துள்ளார்.

வாக்களிப்பு நிலையங்களுக்கு வருகை தரும் போது சுகாதார நடைமுறைகளை பின்பற்றுமாறும் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் வலியுறுத்தியுள்ளார்.

வாக்களிப்பு நிலையங்களுக்கு வருகை தரும் போது, முகக்கவசம் அணிவது கட்டாயமாகும். வாக்களிப்பு நிலையங்களுக்குள் பிரவேசிக்கும் முன்னர், உங்கள் கைகள் சுத்தப்படுத்தப்படுத்தப்படும். அதன்பின்னரே முதலாவதாக அமர்ந்துள்ள அதிகாரியிடம் உங்களின் அடையாள அட்டை காண்பிக்கப்பட வேண்டும், வாக்களிப்பு நிலையங்களிலிருந்து செல்லும் போதும், உங்களின் கைகள் சுத்தம் செய்யப்படும். வாக்களிப்பு நிலையங்களில் ஒரு மீற்றர் இடைவௌி பேணப்படும். உங்களுக்கு இயலுமானால் நீங்கள் வருகை தரும் போது நீலம் அல்லது கறுப்பு நிற பேனையை எடுத்து வாருங்கள். அவ்வாறு பேனை கொண்டு வரப்படவில்லை எனின், தொற்று நீக்கம் செய்யும் திரவத்தில் நனைத்த பேனை உங்களுக்கு வழங்கப்படும்

என மஹிந்த தேஷப்பிரிய இதன்போது வலியுறுத்தியுள்ளார்.

 

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்