வனப் பகுதியிலிருந்து 4 கைத்துப்பாக்கிகள் மீட்பு

வனப் பகுதியிலிருந்து 4 கைத்துப்பாக்கிகள் மீட்பு

வனப் பகுதியிலிருந்து 4 கைத்துப்பாக்கிகள் மீட்பு

எழுத்தாளர் Staff Writer

02 Aug, 2020 | 4:12 pm

Colombo (News 1st) கல்கிசை – இதிகஹதெனிய பகுதியில் கால்வாய்க்கு அருகிலுள்ள வனப்பகுதியில் 4 கைத்துப்பாக்கிகள் மற்றும் அதற்கு பயன்படுத்தப்படும் 8 மெகசீன்கள் ஆகியன கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

இன்று (02) காலை 10.30 மணியளவில் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கமைய முன்னெடுத்த சுற்றிவளைப்பில் குறித்த ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பில் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்