by Staff Writer 02-08-2020 | 2:44 PM
Colombo (News 1st) கொழும்பு துறைமுக ஊழியர்கள் முன்னெடுத்த பணிப்பகிஷ்கரிப்பு இடைநிறுத்தப்பட்டுள்ளது.
பிரதமருடன் இன்று (02) முற்பகல் நடைபெற்ற பேச்சுவார்த்தையை அடுத்து, இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக துறைமுக சுதந்திர ஊழியர் சங்கத்தின் தலைவர் பிரசன்ன களுதரகே தெரிவித்துள்ளார்.
கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை இந்தியாவிற்கு விற்க வேண்டாம் எனவும் அதன் நடவடிக்கைகளை துறைமுகங்கள் அதிகார சபையின் கீழ் கொண்டுவருமாறும் கோரி, துறைமுக ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.