அடையாளம் காணப்பட்டோர் எண்ணிக்கை 600 ஆக பதிவு

கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தில் அடையாளங்காணப்பட்ட கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 600 ஆக பதிவு

by Staff Writer 01-08-2020 | 4:26 PM
Colombo (News 1st) கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தில் அடையாளங்காணப்பட்ட கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 600 ஆக பதிவாகியுள்ளதாக COVID-19 பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது. இதில் புனர்வாழ்வு பெறும் கைதிகள் 482 பேர் மற்றும் அலுவலக ஊழியர்கள் 66 பேர் அடங்குகின்றனர். இதனிடையே, கொரோனா அபாயம் தொடர்ந்தும் காணப்படுவதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார். இதேவேளை, நாளாந்தம் முன்னெடுக்கப்படும் PCR பரிசோதனைகளை இன்று முதல் அதிகரிக்க உத்தேசித்துள்ளதாக தொற்றுநோயியல் தடுப்பு பிரிவின் விசேட வைத்திய நிபுணர் டாக்டர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார். இதுவரை நாட்டில் 28,792 பேர் தனிமைப்படுத்தலை நிறைவு செய்துள்ளனர். 33 தனிமைப்படுத்தல் நிலையங்களில் 1, 866 பேர் தொடர்ந்தும் கண்காணிக்கப்பட்டு வருவதாக இராணுவம் தெரிவித்துள்ளது. நாட்டில் COVID-19 தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 2815 ஆக பதிவாகியுள்ளது. கொரோனா தொற்றுக்குள்ளாகிய ஒருவர் நேற்று அடையாளங்காணப்பட்டுள்ளார். பொலன்னறுவை - லங்காபுர பகுதியில் கொரோனா தொற்றுக்குள்ளாகியவரின் மனைவிக்கே புதிதாக தொற்று உறுதிப்படுப்பத்தப்பட்டுள்ளதாக சுகாதார பிரிவு உறுதிப்படுத்தியுள்ளது. இதற்கிணங்க, 413 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தொற்றுக்குள்ளாகிய 2391 பேர் குணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.