பெரிய வெங்காயத்தின் இறக்குமதி வரி அதிகரிப்பு

பெரிய வெங்காயத்தின் இறக்குமதி வரி அதிகரிப்பு

by Staff Writer 01-08-2020 | 3:42 PM
Colombo (News 1st) ஒரு கிலோகிராம் பெரிய வெங்காயத்தின் இறக்குமதி வரி 50 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் பெரிய வெங்காயத்தின் இறக்குமதி வரி 15 ரூபாவாகக் காணப்பட்டதாக நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர். ஆட்டிகல தெரிவித்தார். இதற்கிணங்க பெரிய வெங்காயத்தின் இறக்குமதி வரி 35 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. தேசிய ரீதியில் பெரிய வெங்காய உற்பத்தியாளர்களை ஊக்குவிக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.