கிளிநொச்சியில் காட்டு யானையில் தாக்குதலுக்குள்ளான பல்கலைக்கழக விரிவுரையாளர் உயிரிழப்பு

கிளிநொச்சியில் காட்டு யானையில் தாக்குதலுக்குள்ளான பல்கலைக்கழக விரிவுரையாளர் உயிரிழப்பு

கிளிநொச்சியில் காட்டு யானையில் தாக்குதலுக்குள்ளான பல்கலைக்கழக விரிவுரையாளர் உயிரிழப்பு

எழுத்தாளர் Staff Writer

01 Aug, 2020 | 4:01 pm

Colombo (News 1st) கிளிநொச்சியில் காட்டு யானை தாக்கியதில் காயமடைந்த பல்கலைக்கழக விரிவுரையாளர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

கடந்த 19 ஆம் திகதி யானை தாக்கி காயமடைந்த யாழ். பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்தின் தொழில்நுட்பப் பிரிவு விரிவுரையாளர், கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

இதன் பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி நேற்றிரவு உயிரிழந்துள்ளதாக கிளிநொச்சி தொழில்நுட்பப் பிரிவு பீடாதிபதி தெரிவித்தார்.

கொழும்பு – களனிமுல்லையை சேர்ந்த 34 வயதான விரிவுரையாளரே உயிரிழந்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்