கடற்பிராந்தியங்களில் கடல் அலை உயரக்கூடும் என எச்சரிக்கை

கடற்பிராந்தியங்களில் கடல் அலை உயரக்கூடும் என எச்சரிக்கை

கடற்பிராந்தியங்களில் கடல் அலை உயரக்கூடும் என எச்சரிக்கை

எழுத்தாளர் Staff Writer

01 Aug, 2020 | 4:34 pm

Colombo (News 1st) பேருவளை தொடக்கம் காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடற்பிராந்தியங்களில் கடல் அலை 02 தொடக்கம் 03 மீட்டர் வரை மேலெழக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.

குறித்த பகுதிகளில் கடல் நீர் நிலப்பரப்பை வந்தடையக்கூடுமெனவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஆகவே, மீனவர்களும் கடல்சார் தொழிலாளர்களும் குறித்த பகுதிகளை அண்மித்து வாழ்வோரும் அவதானத்துடன் செயற்பட வேண்டுமென வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

இதனிடையே, கஹவ தொடக்கம் அக்குரல பகுதிகளில் கடல்நீர் நிலப்பரப்பை வந்தடைந்துள்ளதால், காலி வீதியூடான போக்குவரத்தில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

நிலப்பரப்பில் காணப்படும் கடல் மண் மற்றும் ஏனைய கழிவுகளை அகற்றும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்