349 இலங்கையர்கள் நாடு திரும்பினர்

ஐக்கிய அரபு இராச்சியத்திலிருந்து 349 இலங்கையர்கள் நாடு திரும்பினர்

by Staff Writer 01-08-2020 | 3:53 PM
Colombo (News 1st) கொரோனா பரவல் காரணமாக ஐக்கிய அரபு இராச்சியத்தின் துபாய் மற்றும் கட்டாரின் டோஹாவில் சிக்கியிருந்த இலங்கையர்கள் 349 பேர் இன்று அதிகாலை நாடு திரும்பியுள்ளனர். துபாயில் இருந்து 335 பேரும் டோஹாவில் இருந்து 14 பேரும் தாயகம் திரும்பியுள்ளதாக கட்டுநாயக்க விமான நிலைய கடமைநேர முகாமையாளர் தெரிவித்தார். இதனிடையே, சீனாவின் ஷங்காய் நகரில் இருந்து சீனப் பிரஜைகள் 29 பேர் நேற்றிரவு வருகை தந்துள்ளனர். நாட்டின் சீன முதலீட்டு வேலைத்திட்டங்களில் பணிபுரிவதற்காக அவர்கள் நாட்டை வந்தடைந்துள்ளனர். நாட்டை வந்தடைந்த அனைவரும் PCR பரிசோதனையின் பின்னர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.