English
සිංහල
எழுத்தாளர் Staff Writer
31 Jul, 2020 | 3:16 pm
Colombo (News 1st) குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினரால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குற்ற விசாரணையின் போது துப்பாக்கி தொடர்பான விசாரணைகளுக்கு பொய்யான தகவல்களைக் கொடுத்து சாட்சிகளை மறைத்த குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
2013 ஆம் ஆண்டு முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தன உட்பட சிலருக்கு எதிராக துப்பாக்கி தொடர்பான குற்றச்சாட்டு சுமத்தப்பட்டிருந்ததுடன், அதன் பின்னர் குற்றச்சாட்டின் கீழ் 8 பேர் கைது செய்யப்பட்டனர்.
கம்பஹா கலகெடிஹேன பகுதியில் துப்பாக்கிகள் கண்டுபிடிக்கப்பட்டதுடன், அவை இருந்த இடத்தில் வசித்துவந்த இருவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர்.
கண்டுபிடிக்கப்பட்ட துப்பாக்கிகள் தொடர்பான சாட்சிகளின் போது தெரியவந்த விடயங்களுக்கு அமைவாக ஷானி அபேசேகரவுக்கு எதிராக பொலிஸ் மா அதிபரின் உத்தரவில் விசாரணை ஒன்றை ஆரம்பித்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன குறிப்பிட்டார்.
23 Dec, 2020 | 06:04 AM
25 Nov, 2020 | 11:49 AM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS