MCC தொடர்பில் பொதுஜன பெரமுனவின் நிலைப்பாடு

MCC தொடர்பில் பொதுஜன பெரமுனவின் நிலைப்பாடு

by Staff Writer 30-07-2020 | 8:41 PM
Colombo (News 1st) உதய கம்மன்பில இன்று ஏற்பாடு செய்திருந்த ஊடக சந்திப்பில் MCC தொடர்பில் கருத்துத் தெரிவிக்கப்பட்டது. MCC உடன்படிக்கையில் கைச்சாத்திடுவதில்லையென்றால் அதனை பொதுத் தேர்தலுக்கு முன்னர் ஜனாதிபதி பகிரங்கமாக அறிவிக்க வேண்டும் என எதிர்க்கட்சியினர் கூறுவது கேலிக்குரிய விடயம் என ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் உதய கம்மன்பில குறிப்பிட்டார். MCC கடந்த காலத்திற்கு உரித்தான ஒரு விடயம். MCC உடன்படிக்கையில் கைச்சாத்திடுவது இடம்பெறாது என உதய கம்மன்பில வாக்குறுதியளித்தார். உதய கம்பன்பில இவ்வாறு கருத்துத் தெரிவிக்கும் போது, அவர் போட்டியிடும் கட்சியின் தேசியப் பட்டியலில் பெயரிடப்பட்டுள்ள ஜனாதிபதி சட்டத்தரணி அலி ஷஃப்ரி நியூஸ்லைன் நேர்காணலில் இது தொடர்பில் கருத்துத் தெரிவித்தார். இதன்போது, MCC உடன்படிக்கையை ஆராய்ந்து, நாட்டிற்கு முரண்படும் விடயங்களைக் கலந்துரையாடிய பின்னரே தீர்மானம் எடுக்க முடியும் என குறிப்பிட்டார். வேறொரு அரசாங்கத்துடன் செய்துகொள்ளும் உடன்படிக்கையை எளிதில் கிழித்து எறிய முடியாது என சுட்டிக்காட்டிய சட்டத்தரணி அலி ஷஃப்ரி, MCC உடன்படிக்கையில் அரசாங்கம் கைச்சாத்திடவில்லை எனவும் குறிப்பிட்டார்.

ஏனைய செய்திகள்