வரலாற்று சிறப்புமிகு சமுதாயத்தை கட்டியெழுப்புவோம்

வரலாற்று சிறப்பு மிகு சமுதாயத்தைக் கட்டியெழுப்புவதாக ஜனாதிபதி வாக்குறுதி

by Staff Writer 30-07-2020 | 7:21 PM
Colombo (News 1st) போதைப்பொருள் மற்றும் பாதாள உலகக் குழுக்களைக் கட்டுப்படுத்தி வரலாற்று சிறப்பு மிகு சமுதாயத்தைக் கட்டியெழுப்புவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ இன்று தெரிவித்தார். களனி ரஜமகா விகாரையின் முன்பாக மக்கள் சந்திப்பில் ஈடுபட்டிருந்த போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன வேட்பாளர் சிசிர ஜயக்கொடி இந்த மக்கள் சந்திப்பை ஏற்பாடு செய்திருந்தார். மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் கேட்டறிந்து கொண்ட ஜனாதிபதி களனியை அபிவிருத்தி செய்வதற்கான அதிகாரமிகு பாராளுமன்றத்தைக் கட்டியெழுப்பும் அதிகாரத்தை வழங்குமாறு கோரிக்கை விடுத்தார். வேட்பாளர் நளின் பெர்னாண்டோ ஜா-எல நகரில் ஏற்பாடு செய்திருந்த மக்கள் சந்திப்பிலும் ஜனாதிபதி பங்கேற்றிருந்தார். கம்பஹா மாவட்டத்தின் சகல ஆற்றுப் பகுதிகளையும் அபிவிருத்தி செய்வதாகவும் ஜா-எல பகுதியை அபிவிருத்தி செய்வதாகவும் ஜனாதிபதி இதன்போது உறுதியளித்தார். லலந்த குணவர்தன கட்டான அடிஅம்மபலம பகுதியில் ஏற்பாடு செய்திருந்த மக்கள் சந்திப்பிலும் ஜனாதிபதி கலந்து கொண்டிருந்தார். 20 வயதில் தமது பட்டப்படிப்பினைப் பூர்த்தி செய்யும் வகையில் கல்விக் கொள்கையில் மேம்பாட்டு நிலைமையை ஏற்படுத்துமாறு இதன்போது ஜனாதிபதியிடம் இளைஞர் குழுவினர் கோரிக்கை விடுத்தனர்.