1000 கிலோகிராம் மஞ்சளுடன் மன்னாரில் ஒருவர் கைது

சட்டவிரோதமாக நாட்டிற்குக் கொண்டுவரப்பட்ட 1000 கிலோகிராம் மஞ்சளுடன் மன்னாரில் ஒருவர் கைது

by Staff Writer 30-07-2020 | 3:30 PM
Colombo (News 1st) கடல் மார்க்கமாக சட்டவிரோதமாக நாட்டிற்குக் கொண்டுவரப்பட்ட 1000 கிலோகிராம் மஞ்சளுடன் மன்னாரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மன்னார் - சிலாவத்துறை பகுதியில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக கடற்படையினர் குறிப்பிட்டனர். கடற்கரையிலிருந்து வண்டி ஒன்றினூடாக மஞ்சளைக் கொண்டு சென்ற போது சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். 20 மூடைகளில் பொதியிடப்பட்ட நிலையில் இவை பறிமுதல் செய்யப்பட்டதாக கடற்படையினர் குறிப்பிட்டனர். மஞ்சளுடன் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் தனிமைப்படுத்தல் செயற்பாட்டிற்கு உட்படுத்துவதற்காக மன்னார் பொது சுகாதார பரிசோதகரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். பறிமுதல் செய்யப்பட்ட 1000 கிலோகிராம் மஞ்சளை யாழ்ப்பாணம் சுங்க அலுவலகத்தில் கையளித்துள்ளதாக கடற்படையினர் தெரிவித்தனர்.