Colombo (News 1st) கருக்கலைப்பை சட்டபூர்வமாக்கும் மெக்ஸிக்கோ அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு அந் நாட்டு உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
மெக்ஸிக்கோவின் அனைத்து மாநிலங்களுக்கும் கருக்கலைப்பு உரிமைகளை வழங்குவதற்கான உத்தரவுக்கே இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு கிழக்குப் பிராந்திய மாநிலமான வெராகுருஸில் (Veracruz) வழங்கப்பட்ட உத்தரவுடன் தொடர்பானதாக அமைந்துள்ளதாக சுட்டிக்காட்டப்படுகின்றது.