by Chandrasekaram Chandravadani 30-07-2020 | 8:32 AM
Colombo (News 1st) அமெரிக்காவின் ஒரிகன் (Oregon) மாநிலத்தின் போர்ட்லேண்டில் (Portland) இருந்து சில மத்திய பாதுகாப்பு படையினரை மீள அழைப்பதற்கு ட்ரம்ப் நிர்வாகம் உத்தேசித்துள்ளது.
ஆர்ப்பாட்டக்காரர்கள் - பாதுகாப்பு படையினர் இடையிலான மோதல் கடந்த சில வாரங்களாக வலுப்பெற்றுள்ளதை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
எவ்வாறாயினும் மத்திய அரசின் கட்டடங்களை பாதுகாக்கும் மாநில பொலிஸார் மீள அழைக்கப்பட மாட்டார்கள் என அமெரிக்க உள்ளக பாதுகாப்பு செயலாளர் சாட் வோல்ப் (Chad Wolf) தெரிவித்துள்ளார்.
மத்திய பாதுகாப்பு படையினர் இன்று (30) முதல் போர்ட்லேண்டில் இருந்து வௌியேறுவர் என ஒரிகன் மாநில முதல்வர் கேட் பிரவுன் தெரிவித்துள்ளார்.
கறுப்பினத்தவர்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 62 நாட்களாக போர்ட்லேண்டில் ஆர்ப்பாட்டங்கள் வலுப்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.