நாளாந்தம் 3உயிர்களைக் காவுகொள்ளும் வாய் புற்றுநோய்

நாளாந்தம் 3 உயிர்களைக் காவு கொள்ளும் வாய்ப் புற்றுநோய்

by Staff Writer 30-07-2020 | 8:27 AM
Colombo (News 1st) வாய் புற்றுநோயினால் நாளாந்தம் மூவர் உயிரிழப்பதாக சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது. இதேவேளை, வாய் புற்றுநோயுடன் நாளாந்தம் 6 பேர் அடையாளம் காணப்படுவதாக சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. வெற்றிலை, புகையிலை, பாக்கு, சிகரட் மற்றும் மதுபானம் அருந்துதல் போன்ற பழக்கவழக்கங்களினால் ஆண்களே அதிகமாக புற்றுநோய்க்கு இலக்காகின்றனர். கொரோனா வைரஸ் தொற்று பரவுவதற்கும் வாய் புற்றுநோய் பாரிய தாக்கத்தை ஏற்படுத்துவதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. வெற்றிலை பயன்பாடு மற்றும் எச்சில் துப்புவதனூடாக வைரஸ் பரவும் வேகம் அதிகரிப்பதாக சுகாதார அமைச்சு மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.