English
සිංහල
எழுத்தாளர் Staff Writer
30 Jul, 2020 | 7:44 pm
Colombo (News 1st) குருநாகல் தொல்பொருள் கட்டடம் தகர்க்கப்பட்டமை தொடர்பாக இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை.
இந்த அழிவு குறித்து கருத்து வெளியிட்ட தொல்பொருளியல் சக்கரவர்த்தி எல்லாவல மேதானந்த தேரர், பொறுப்புக் கூற வேண்டியவர்கள் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.
அவர் தற்போது கிழக்கு மாகாணத்தின் தொல்பொருள் உரிமைகளை முகாமைத்துவப்படுத்தும் ஜனாதிபதி செயலணி உறுப்பினராக செயற்படுகின்றார்.
தொல்பொருள் கட்டடத்தை தகர்த்தமை இனத்திற்கு செய்த பாரிய மோசடியென அவர் சுட்டிக்காட்டினார்.
அவற்றை மீளக் கட்டியெழுப்பினாலும் அவை புதிய நிர்மாணமாக அமையுமே ஒழிய, மரபுத்தன்மை ஏற்படாது என அவர் குறிப்பிட்டார்.
இதனை செய்த நபராக நகர மேயர் கூறப்படுகிறார். அந்த நபருக்கு எதிராக சட்டத்தை நடைமுறைப்படுத்தி கட்டாயமாக அவருக்கு நமது நீதிமன்ற கட்டமைப்பிற்கு அமைவாக, தொல்பொருள் சட்டத்தின் பிரகாரம் உரிய தண்டனை விதிக்கப்பட வேண்டும். அவ்வாறு செய்யாவிட்டால் எமக்குள்ள இந்த ஏனைய சகல தொல்பொருள் சொத்துக்களையும் இடித்து அழிப்பதற்கான சாத்தியம் உள்ளது
என எல்லாவல மேதானந்த தேரர் கூறினார்.
06 Jan, 2022 | 07:33 PM
27 Jun, 2021 | 05:36 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS