ஸ்டெல்லாவிற்கு நிதி வழங்குவதில் ஆட்சேபனை இல்லை:PTL

PTL ஊடாக முதலீடு செய்துள்ள நிதியை ஸ்டெலா ஐராங்கனிக்கு செலுத்துமாறு நீதிமன்றம் உத்தரவு 

by Staff Writer 29-07-2020 | 1:12 PM
Colombo (News 1st) 2015 பெப்ரவரி மாதம் 27 ஆம் திகதி சர்ச்சைக்குரிய முறிகள் கொள்வனவிற்காக பேர்ப்பச்சுவல் ட்ரெஷரீஸ் நிறுவனத்தினூடாக ஸ்டெல்லா ஐராங்கனி திசாநாயக்க முதலீடு செய்துள்ள நிதி மற்றும் அதற்கான வட்டித் தொகையான 15 இலட்சத்து எண்ணாயிரம் ரூபாவை அவருக்கு மீள செலுத்துமாறு கொழும்பு பிரதம நீதவான் லங்கா ஜயரத்ன இன்று (29) இலங்கை மத்திய வங்கியின் ஆளுனருக்கு உத்தரவிட்டுள்ளார். குறித்த முதலீடு தற்போது முதிர்ச்சியடைந்துள்ளதால் இலங்கை மத்திய வங்கியினால் முடக்கப்பட்டுள்ள பேர்ப்பச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவனத்தின் அதேநேர மொத்த தீர்ப்பனவு முறைமை கணக்கில் இருந்து குறித்த தொகையை மீள செலுத்துமாறும் நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார். ஸ்டெல்லா ஐராங்கனி திசாநாயக்க தமது நிறுவனத்தினூடாக முதலீடு செய்துள்ள நிதி முதிர்ச்சியடைந்திருந்தால் அதற்கான தொகை மற்றும் வட்டியை மீள செலுத்துவில் எவ்வித ஆட்சேபனையும் இல்லை என மத்திய வங்கி ஆளுனருக்கு எழுத்து மூலம் அறிவிக்குமாறு பேர்ப்பச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவனத்தின் தலைவர் ஜெப்ஃரி ஜோசப் அலோசியசுக்கு பிரதம நீதவான் உத்தரவிட்டுள்ளார்.