ETF வட்டி ஒரு வீதத்தால் குறைப்பு 

ETF வட்டி ஒரு வீதத்தால் குறைப்பு 

by Staff Writer 29-07-2020 | 1:17 PM
Colombo (News 1st) ஊழியர் நம்பிக்கை நிதியத்தின் உறுப்பினர்களது நிதி மீதான வட்டி ஒரு வீதத்தால் குறைக்கப்பட்டுள்ளது. இந்த வட்டி வீதம் 2018 ஆம் ஆண்டில் 9 வீதமாக காணப்பட்டதாக ஊழியர் நம்பிக்கை நிதியத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் சுட்டிக்காட்டினார். இதற்கமைய, வட்டி 8 வீதம் வரை குறைவடைந்துள்ளதாக குறித்த அதிகாரி மேலும் குறிப்பிட்டார். கடந்த வருடம் இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதல் மற்றும் கொரோனா தொற்று காரணமாக இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. முதலீட்டு வருவாயில் ஏற்பட்ட சடுதியான வீழ்ச்சி காரணமாக இந்த நிலைமையை எதிர்கொள்ள நேரிட்டுள்ளதாக ஊழியர் நம்பிக்கை நிதியத்தின் பொறுப்பாளர் சபை தெரிவித்துள்ளது.