வேலங்குளம் தனிமைப்படுத்தல் முகாமில் தங்கியிருந்த 165 பேர் வீடு திரும்பினர்

வேலங்குளம் தனிமைப்படுத்தல் முகாமில் தங்கியிருந்த 165 பேர் வீடு திரும்பினர்

வேலங்குளம் தனிமைப்படுத்தல் முகாமில் தங்கியிருந்த 165 பேர் வீடு திரும்பினர்

எழுத்தாளர் Staff Writer

29 Jul, 2020 | 5:53 pm

Colombo (News 1st) வெளிநாடுகளிலிருந்து நாடு திரும்பிய நிலையில் வவுனியா – வேலங்குளம் தனிமைப்படுத்தல் முகாமில் தங்கியிருந்த 165 பேர் இன்று அங்கிருந்து வௌியேறினர்.

கடந்த 10 ஆம் திகதி துபாயிலிருந்து நாட்டிற்கு அழைத்துவரப்பட்ட 165 பேர் வேலங்குளம் விமானப்படைத்தளத்தில் அமைக்கப்பட்டுள்ள, தனிமைப்படுத்தல் முகாமிற்கு அழைத்துவரப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர்.

19 நாட்கள் தனிமைப்படுத்தல் காலத்தை நிறைவு செய்த நிலையில், தங்களின் சொந்த இடங்களான மட்டக்களப்பு, கண்டி, காலி, போன்ற பகுதிகளுக்கு பஸ்கள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர்.

இவர்களுக்கு PCR பரிசோதனைகளும் முன்னெடுக்கப்பட்டதுடன், அதில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்