புகலிடக் கோரிக்கையாளர்கள் 65 பேருக்கு கொரோனா

புகலிடக் கோரிக்கையாளர்கள் 65 பேருக்கு கொரோனா

புகலிடக் கோரிக்கையாளர்கள் 65 பேருக்கு கொரோனா

எழுத்தாளர் Staff Writer

29 Jul, 2020 | 10:52 am

Colombo (News 1st) மத்தியதரைக் கடலில் வைத்து மோல்டா கரையோரப் பாதுகாப்புப் படையினரால் மீட்கப்பட்ட புகலிடக் கோரிக்கையாளர்களில், 65 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மீட்கப்பட்ட 94 புகலிடக் கோரிக்கையாளர்களும் கரைக்கு அழைத்து வரப்பட்டு PCR பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டிருந்தனர்.

பரிசோதனை முடிவுகள் கிடைக்கப்பெற்றவர்களில், 65 பேர் தொற்றுக்குள்ளானது கண்டறியப்பட்டதுடன், 20 பேருக்கு தொற்று இல்லையென்பதும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

ஏனைய 9 பேரினது முடிவுகள் இன்னும் கிடைக்கப்பெறவில்லை என மோல்டா அறிவித்துள்ளது.

குறித்த புகலிடக் கோரிக்கையாளர்கள் எரித்திரியா, மொரோக்கோ மற்றும் சூடான் ஆகிய நாடுகளை சேர்ந்தவர்களென நம்பப்படுகின்றது.

அத்துடன் இவர்கள் லிபியாவிலிருந்து தமது பயணத்தை ஆரம்பித்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

இவர்கள் வரவேற்பு மண்டபமொன்றில், தனிமைப்படுத்தப்படவுள்ளதாகவும் மோல்டா அரசு சுட்டிக்காட்டியுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்