தேர்தல் சட்ட மீறல்கள்: 24 மணித்தியாலங்களில் 201 முறைப்பாடுகள் பதிவு

தேர்தல் சட்ட மீறல்கள்: 24 மணித்தியாலங்களில் 201 முறைப்பாடுகள் பதிவு

தேர்தல் சட்ட மீறல்கள்: 24 மணித்தியாலங்களில் 201 முறைப்பாடுகள் பதிவு

எழுத்தாளர் Staff Writer

29 Jul, 2020 | 4:49 pm

Colombo (News 1st) இன்று மாலை 4 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பில் 201 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன.

தேசிய தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ மத்திய நிலையத்திற்கு 22 முறைப்பாடுகளும் மாவட்ட தேர்தல் முறைப்பாட்டு மத்திய நிலையங்களுக்கு 179 முறைப்பாடுகளும் பதிவாகியுள்ளன.

அதற்கமைய, இதுவரையான காலப்பகுதியில் 5,601 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரியவின் கையொப்பத்துடன் இந்த அறிக்கை வௌியிடப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்