எத்தனோல் போத்தல்களுடன் மதுவரி திணைக்கள அதிகாரி ஒருவர் கைது

எத்தனோல் போத்தல்களுடன் மதுவரி திணைக்கள அதிகாரி ஒருவர் கைது

எத்தனோல் போத்தல்களுடன் மதுவரி திணைக்கள அதிகாரி ஒருவர் கைது

எழுத்தாளர் Staff Writer

29 Jul, 2020 | 11:16 am

Colombo (News 1st) எத்தனோல் போத்தல்கள், மதுபான போத்தல்கள் என்பவற்றுடன் கலால்வரி திணைக்கள அதிகாரி​ ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஜாஎல – பமுனுகம பகுதியில் நடத்தப்பட்ட சுற்றிவளைப்பில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரான அதிகாரி தொடர்பில் விசாரணை செய்வதற்காக பிரதி ஆணையாளர் ஒருவரின் தலைமையில் விசாரணைக் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக பிரதி கலால்வரி திணைக்கள ஆணையாளர் கபில குமாரசிங்க தெரிவித்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் உத்தியோகபூர்வமாக அறிவித்ததன் பின்னர் குறித்த அதிகாரியை பணியில் இருந்து நீக்குவதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வத்தளையைச் சேர்ந்த கலால்வரித் திணைக்கள அதிகாரி ஒருவரே சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பிலான ​மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்