இராஜாங்கனை தபால் மூல வாக்களிப்பு இன்று

இராஜாங்கனை தபால் மூல வாக்களிப்பு இன்று

இராஜாங்கனை தபால் மூல வாக்களிப்பு இன்று

எழுத்தாளர் Staff Writer

29 Jul, 2020 | 7:20 am

Colombo (News 1st) கொரோனா பரவல் காரணமாக பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட இராஜாங்கனை பகுதியில் இன்று (29) தபால் மூல வாக்களிப்பு இடம்பெறவுள்ளது.

420 அரச அதிகாரிகள் இன்று தபால் மூலம் வாக்களிக்கவுள்ளதாக அனுராதபுரம் மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரி R.M. வன்னிநாயக்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை, பயணக் கட்டுப்பாடு விதிக்கப்பட்ட இராஜாங்கனை உள்ளிட்ட பகுதிகளில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், வாக்காளர் அட்டைகளை வீடுகளுக்கு பகிர்ந்தளிக்கும் நடவடிக்கை இன்றுடன் நிறைவடைவதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதுவரை 98 வீதமான வாக்காளர் அட்டைகள் வீடுகளுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளதாக தபால் மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன சுட்டிக்காட்டினார்.

தேர்தல் வாக்காளர் அட்டைகள் கிடைக்காதவர்கள் தபால் நிலையங்களுக்கு சென்று வாக்குச் சீட்டுக்களைப் பெற்றுக் கொள்ள முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்