by Staff Writer 28-07-2020 | 5:25 PM
Colombo (News 1st) T-56 ரக துப்பாக்கி, 22 ரவைகளுடன் வெல்லவ பகுதியில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் குழு உறுப்பினர் ஒருவருடைய தகவலுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே துப்பாக்கி உள்ளிட்ட வெடிபொருட்கள் மீட்கப்பட்டதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் குறிப்பிட்டனர்.
வீட்டுத் தோட்டத்தில் பிளாஸ்டிக் வாளியில் கிரீஸ் இட்டு புதைக்கப்பட்டிருந்த நிலையில் துப்பாக்கி மீட்கப்பட்டுள்ளது.
பேலியகொடை பகுதியில் திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் குழுவைச் சேர்ந்த மல்வத்தே மஞ்சு என்பவருக்கு சொந்தமான துப்பாக்கியே கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப்படை குறிப்பிட்டுள்ளது.
குற்றச்செயலுக்கு பயன்படுத்தப்பட்ட பின்னர், இன்று கைது செய்யப்பட்டவரிடம் இந்த T-56 ரக துப்பாக்கி வழங்கப்பட்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மேலதிக விசாரணைகளுக்கான குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.