by Staff Writer 28-07-2020 | 3:38 PM
Colombo (News 1st) 2020 பொதுத்தேர்தலில் போட்டியிடும் ஐக்கிய மக்கள் சக்தியின் 54 உறுப்பினர்களின் உறுப்புரிமையை இரத்து செய்ய ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு தீர்மானித்துள்ளது.
உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்கள் 61 பேரின் உறுப்புரிமையையும் இரத்து செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் அகில விராஜ் காரியவசம் குறிப்பிட்டார்.
இன்று நடைபெற்ற செயற்குழுக் கூட்டத்தின் போது இந்த விடயம் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுக் கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே கட்சியின் பொதுச்செயலாளர் அகிலவிராஜ் காரியவசம் இதனைத் தெரிவித்தார்.