மாகந்துரே மதுஷின் உதவியாளர் ஒருவர் கைது

மாகந்துரே மதுஷின் உதவியாளர் ஒருவர் கைது

மாகந்துரே மதுஷின் உதவியாளர் ஒருவர் கைது

எழுத்தாளர் Staff Writer

28 Jul, 2020 | 1:28 pm

Colombo (News 1st) திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் குழுவின் தலைவரான மாகந்துரே மதுஷின் நெருங்கிய உதவியாளர் ஒருவர் கொழும்பு – வாழைத்தோட்டம் பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார்.

வாழைத்தோட்டம், மிரானியா வீதி பகுதியில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போது 2 கிராம், 350 மில்லிகிராம் ஹெரோயினுடன் சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

கொழும்பு -12, மிரானிய வீதியை சேர்ந்த குறித்த சந்தேக நபர் திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் குழுவின் உறுப்பினராவார்.

மாகந்துரே மதுஷ் கைது செய்யப்படுவதற்கு முன்னர் துபாயில் இடம்பெற்ற களியாட்ட நிகழ்வில் கலந்துகொண்ட ஒருவரே வாழைத்தோட்டம் பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்