கொரோனா: பாரிய உலக சுகாதார அவசரகால நிலையாக அறிவிப்பு

கொரோனா: பாரிய உலக சுகாதார அவசரகால நிலையாக அறிவிப்பு

கொரோனா: பாரிய உலக சுகாதார அவசரகால நிலையாக அறிவிப்பு

எழுத்தாளர் Staff Writer

28 Jul, 2020 | 12:26 pm

Colombo (News 1st) கொரொனா தொற்று மிகவும் பாரிய உலக சுகாதார அவசரகால நிலை என உலக சுகாதார ஸ்தாபனம் அறிவித்துள்ளது.

கடந்த காலங்களில் எபோலா, ஸிகா, போலியோ மற்றும் பன்றிக்காய்ச்சல் பொன்ற நோய் தொற்றின்போது பிறப்பிக்கப்பட்ட அவசரகால நிலையை விட இது பாரதூரமானது என உலக சுகாதார ஸ்தாபனத்தின் தலைவர், டொக்டர் ரெட்ரோஸ் அதனம் (Tedros Adhanom) தெரிவித்துள்ளார்.

வைரஸ் தொற்றை கட்டுப்படுத்துவதற்கு சமூக இடை​வௌியை பேண வேண்டும் என்பதுடன், முகக்கவசங்களை அணிவது போன்ற சுகாதார நடைமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதனிடையே இந்தோனேஷியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்தை கடந்துள்ளது.

நேற்று ஒரே நாளில் 1,525 பேர் நோய் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டதுடன் தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு இலட்சத்து 303 அக அதிகரித்துள்ளது.

இதனிடையே இந்தொனேஷியாவில் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளுக்காகவும் தொற்று காரணமாக சரிவிலுள்ள பொருளாதாரத்தை மீட்பதற்காகவும் அந்நாட்டு ஜனாதிபதி ஜோக்கோ விடோடோ இரண்டு குழுக்களை அமைத்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்