கிளிநொச்சியில் மக்கள் சக்தி மக்கள் அரண் அங்குரார்ப்பணம்

கிளிநொச்சியில் மக்கள் சக்தி மக்கள் அரண் அங்குரார்ப்பணம்

கிளிநொச்சியில் மக்கள் சக்தி மக்கள் அரண் அங்குரார்ப்பணம்

எழுத்தாளர் Staff Writer

28 Jul, 2020 | 10:16 pm

Colombo (News 1st) கிளிநொச்சியில்  ‘மக்கள் சக்தி மக்கள் அரண்’ அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.

கிளிநொச்சி பிராந்திய செய்தியாளரின் தலைமையில், கிளிநொச்சி KN/2 ஆனைவிழுந்தான் குளம் கிராமத்தில் மக்கள் அரண் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

ஆனைவிழுந்தான் குளம் அறநெறிப் பாடசாலை மண்டபத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வு மங்கல விளக்கேற்றலுடன் இன்று முற்பகல் 11 மணிக்கு ஆரம்பமானது.

ஆனைவிழுந்தான் குளம் கிராமத்திற்கான மக்கள் அரண் குழாத்தின் தலைவர், செயலாளர் மற்றும் பொருளாளர் நியமனங்கள் இதன்போது இடம்பெற்றதுடன், 21 அங்கத்துவ உறுப்பினர்கள் இதன்போது பெயரிடப்பட்டனர்.

அதன் பின்னர் நடைபெற்ற சந்திப்பில் போதைப்பொருள் பாவனையை ஒழித்தல், போக்குவரத்து, மருத்துவ சேவையை பெறுவதிலுள்ள சிரமம், குடிநீர் பிரச்சனை தொடர்பிலான பல்வேறு விடயங்கள் இதன்போது கலந்துரையாடப்பட்டன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்