கத்தாரிலிருந்து 55 பேர் நாடு திரும்பினர்

கத்தாரிலிருந்து 55 பேர் நாடு திரும்பினர்

கத்தாரிலிருந்து 55 பேர் நாடு திரும்பினர்

எழுத்தாளர் Staff Writer

27 Jul, 2020 | 2:22 pm

Colombo (News 1st) கத்தாரில் சிக்கியிருந்த 55 இலங்கையர்கள் இன்று (27) அதிகாலை நாடு திரும்பியுள்ளனர்.

கத்தார் விமான சேவைக்கு சொந்தமான விசேட விமானத்தினூடாக இவர்கள் அழைத்து வரப்பட்டுள்ளனர்.

நாடு திரும்பியவர்களில் 8 பேர் சாதாரண பயணிகள் எனவும் ஏனையவர்கள் கப்பலில் பணியாற்றுவோர் எனவும் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் கடமை நேர முகாமையாளர் குறிப்பிட்டார்.

இவர்கள் அனைவருக்கும் PCR சோதனைகளை நடாத்தி, தனிமைப்படுத்தப்படவுள்ளதாகவும் கடமை நேர முனாரைமயாளர் கூறினார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்