தேர்தல் சட்டங்களை மீறிய 6 வேட்பாளர்கள் கைது

தேர்தல் சட்டங்களை மீறிய 6 வேட்பாளர்கள் கைது

தேர்தல் சட்டங்களை மீறிய 6 வேட்பாளர்கள் கைது

எழுத்தாளர் Staff Writer

25 Jul, 2020 | 4:20 pm

Colombo (News 1st) தேர்தல் சட்டங்களை மீறும் நடவடிக்கைகள் தொடர்பான சுற்றிவளைப்புகளை மேலும் விரிவுபடுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில், சுற்றிவளைப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்படவுள்ள பொலிஸாரின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல் நடவடிக்கைகளுக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் பிரியந்த விஜேசூரிய தெரிவித்தார்.

இதனிடையே, தேர்தல் சட்டங்களை மீறிய குற்றச்சாட்டில் இதுவரை 6 வேட்பாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று 02 வேட்பாளர்கள் கைது செய்யப்பட்டதாக தேர்தல் நடவடிக்கைகளுக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் பிரியந்த விஜேசூரிய தெரிவித்தார்.

தேர்தல் சட்டங்களை மீறிய குற்றச்சாட்டில் இதுவரை 257 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் நேற்றைய நாளில் மாத்திரம் 20 பேர் கைது செய்யப்பட்டதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்