இந்திய உயர்ஸ்தானிகராலய செயலாளரின் வீட்டில் கொள்ளை

இந்திய உயர்ஸ்தானிகராலய செயலாளரின் வீட்டில் கொள்ளை

இந்திய உயர்ஸ்தானிகராலய செயலாளரின் வீட்டில் கொள்ளை

எழுத்தாளர் Staff Writer

25 Jul, 2020 | 3:37 pm

Colombo (News 1st) இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் செயலாளரின் வீட்டில் பணம் கொள்ளையிடப்பட்டுள்ளது.

பொரளை – காசல் வீதியிலுள்ள குறித்த வீட்டினுள் நேற்று பிற்பகல் 01 மணியளவில் நுழைந்த நபர், அங்கிருந்து 2000 அமெரிக்க டொலர்களையும் 10,000 ரூபாவையும் கொள்ளையிட்டுச் சென்றுள்ளார்.

அந்நபர் போதைப்பொருளுக்கு அடிமையானவராக இருக்கலாமென சந்தேகம் வௌியிடப்பட்டுள்ளது.

வீட்டில் பொருத்தப்பட்டுள்ள பாதுகாப்பு கேமராவைப் பயன்படுத்தி அவரைக் கைது செய்வதற்கான விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்