நோயாளர்களின் எண்ணிக்கை 40 இலட்சத்தைக் கடந்தது

அமெரிக்காவில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 40 இலட்சத்தைக் கடந்தது

by Bella Dalima 24-07-2020 | 4:47 PM
Colombo (News 1st) அமெரிக்காவில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 40 இலட்சத்தைக் கடந்துள்ளது. அமெரிக்காவில் 24 மணித்தியாலங்களில் 67,189 கொரோனா நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். அமெரிக்காவில் கொரோனா தொற்றினால் இதுவரை 1,47,281 பேர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவில் மணித்தியாலத்திற்கு 2600 கொரோனா நோயாளர்கள் புதிதாக பதிவாவதாக புதிய தரவுகள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், ஃப்ளோரிடாவில் நடைபெறவிருந்த குடியரசுக் கட்சியின் கூட்டத்தை இரத்து செய்வதற்கு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நடவடிக்கை எடுத்துள்ளார்.