வெலிக்கடை சிறைச்சாலையின் மகளிர் பிரிவு வளாகத்தினுள் வீசப்பட்டிருந்த பொருட்கள் கண்டுபிடிப்பு

வெலிக்கடை சிறைச்சாலையின் மகளிர் பிரிவு வளாகத்தினுள் வீசப்பட்டிருந்த பொருட்கள் கண்டுபிடிப்பு

வெலிக்கடை சிறைச்சாலையின் மகளிர் பிரிவு வளாகத்தினுள் வீசப்பட்டிருந்த பொருட்கள் கண்டுபிடிப்பு

எழுத்தாளர் Staff Writer

24 Jul, 2020 | 5:27 pm

Colombo (News 1st) வெலிக்கடை சிறைச்சாலையின் மகளிர் பிரிவு வளாகத்தினுள் மதிலைத் தாண்டி வீசப்பட்டிருந்த கையடக்கத் தொலைபேசி, போதைப்பொருள் உள்ளிட்ட பொருட்கள் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

கடந்த செவ்வாய், புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் இந்த பொருட்கள் மதிலைத் தாண்டி சிறைச்சாலைக்குள் வீசப்பட்டிருந்ததாக சிறைச்சாலைகள் ஆணையாளரும் கட்டுப்பாட்டாளருமான சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.

கையடக்கத் தொலைபேசி, 39 பேட்டரிகள், சிம் அட்டை, புகையிலை, 02 ஹெரோயின் பக்கெட்கள் ஆகியன கண்டுபிடிக்கப்பட்டதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

இந்த பொருட்கள் சிறைச்சாலையின் மகளிர் பிரிவு வளாகத்தினுள் வீசப்பட்டிருப்பதை சிறைச்சாலை அதிகாரியொருவர் கண்டுள்ளார்.

கைப்பற்றப்பட்ட பொருட்கள் மேலதிக பரிசோதனைக்காக பொரளை பொலிஸில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளரும் கட்டுப்பாட்டாளருமான சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்