கொழும்பின் சில பகுதிகளில் நாளை 9 மணித்தியால நீர்வெட்டு

கொழும்பின் சில பகுதிகளில் நாளை 9 மணித்தியால நீர்வெட்டு

கொழும்பின் சில பகுதிகளில் நாளை 9 மணித்தியால நீர்வெட்டு

எழுத்தாளர் Staff Writer

24 Jul, 2020 | 3:32 pm

Colombo (News 1st) கொழும்பின் சில பகுதிகளில் நாளை (25) 9 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

நாளை இரவு 8 மணி முதல் நாளை மறுதினம் அதிகாலை 5 மணி வரையான காலப்பகுதியில் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

இதற்கிணங்க கொழும்பு 13,14 மற்றும் 15 ஆகிய பிரதேசங்களில் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதுடன் கொழும்பு 11 மற்றும் 12 ஆகிய பகுதிகளில் குறைந்த அழுத்தத்துடன் நீர் விநியோகிக்கப்படவுள்ளது.

கொழும்பு – நீர் மற்றும் கழிவு நீர் மேலாண்மை மேம்பாட்டு முதலீட்டு திட்டத்தின் கீழ், விநியோகக் கட்டமைப்பில் முன்னெடுக்கப்படும் அத்தியாவசிய நடவடிக்கைகள் காரணமாக நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்