புறக்கோட்டை உள்ளிட்ட பல பகுதிகளில் நீர்வெட்டு

புறக்கோட்டை உள்ளிட்ட பல பகுதிகளில் 14 மணி நேர நீர்வெட்டு

by Staff Writer 23-07-2020 | 11:24 AM
Colombo (News 1st) கொழும்பு 5, 7, 8 மற்றும் அதுள்கோட்டை, நுகேகொடை உள்ளிட்ட பல பகுதிகளில் இன்றிரவு (23) 10 மணி முதல் நாளை (24) நண்பகல் 12 மணி வரை 14 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. இதற்கமைய, புறக்கோட்டை, பெத்தகானை, மிரிஹானை, உடஹமுல்ல, கங்கொடவில, மாதிவெல, நுகேகொடை, பாகொட, நாவல மற்றும் மொரகஸ்முல்ல உள்ளிட்ட பகுதிகளில் நீர் விநியோம் தடை செய்யப்படவுள்ளது. மேலும், கொழும்பு 4, 6, மஹரகம மற்றும் பொரலஸ்கமுவ ஆகிய பகுதிகளில் குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகிக்கப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. அம்பத்தலேயில் இருந்து கோட்டை ஜூபிளி நீர்த்தடாகத்துக்கு நீரை விநியோகிக்கும் நீர்க்குழாயில் ஏற்பட்டுள்ள நீர்க்கசிவை திருத்துவதற்காக நீர் விநியோகத்தை தடை செய்ததாக சபை வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, பத்தரமுல்லை உள்ளிட்ட பல பகுதிகளில் இன்று 8 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. இதற்கமைய, இன்றிரவு 10 மணி முதல் நாளை அதிகாலை 6 மணி வரையான காலப்பகுதியில் பத்தரமுல்ல, கொஸ்வத்த, மாலபே, ஜயவடனகம மற்றும் தலவத்துகொட உள்ளிட்ட பகுதிகளில் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. படபொத (BATTAPOTHA) நீர்த்தாங்கிக்கு நீரை விநியோக்கும் குழாய் மார்க்கத்தில் மேற்கொள்ளப்படவுள்ள திருத்தப்பணிகள் காரணமாக நீர் விநியோகம் தடை செய்யப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை குறிப்பிட்டுள்ளது. இதனிடையே நாளை காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை வாதுவ உள்ளிட்ட பல பகுதிகளில் 12 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடைசெய்யப்படுவதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. இதற்கிணங்க, வாதுவ, வஸ்கடுவ, களுத்துறை வடக்கு மற்றும் தெற்கு, கட்டுகுருந்த, நாகொட, பயாகல, பிலிமினாவத்த உள்ளிட்ட பகுதிகளில் அந்த காலப்பகுதியில் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. மேலும் போம்புவள, மக்கொன, களுவாமோதர, மொரகல்ல, அளுத்கம, தர்காநகர் மற்றும் பெந்தோட்டை உள்ளிட்ட பகுதிகளிலும் நீர் விநியோம் தடை செய்யப்படவுள்ளது. கெத்ஹேன நீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கான மின் விநியோகம் தடைப்பட்டுள்ள நிலையில் நீர் விநியோகம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.  

ஏனைய செய்திகள்