குருநாகலில் தகர்க்கப்பட்ட புராதன கட்டடப் பகுதிக்குள் நுழையத் தடை

by Staff Writer 23-07-2020 | 3:37 PM
Colombo (News 1st) குருநாகலில் தகர்க்கப்பட்ட புராதன கட்டடம் அமைந்துள்ள பகுதிக்குள் நுழைவது தடை செய்யப்பட்டுள்ளது. இதற்கான தடை உத்தரவு சட்ட மா அதிபர் திணைக்களத்தால் குருநாகல் நீதவான் நீதிமன்றத்தில் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகள் நிறைவு பெறும் வரையில், குறித்த பகுதியில் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் இந்த தடை உத்தரவு பெற்றுக்கொள்ளப்பட்டதாக சட்ட மா அதிபரின் இணைப்பதிகாரி அரச சட்டத்தரணி நிஷாரா ஜயரத்ன தெரிவித்தார். குறித்த கட்டடம் இடிக்கப்பட்டமை தொடர்பிலான இடைக்கால அறிக்கையின் பரிந்துரைகளை துரிதமாக நடைமுறைப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. நேற்று (22) இடம்பெற்ற கலந்துரையாடலில் இந்த தீர்மானம் எட்டப்பட்டதாக தொல்பொருள் பணிப்பாளர் நாயகம், பேராசிரியர் செனரத் திசாநாயக்க தெரிவித்துள்ளார்.