அமெரிக்காவில் 4,100,875 பேருக்கு கொரோனா

உலகளாவிய ரீதியில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 15 மில்லியன் ஆகியது

by Staff Writer 23-07-2020 | 11:31 AM
Colombo (News 1st) உலக நாடுகளில், கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 15,379,943 ஆக உயர்வடைந்துள்ளது. கொரோனா நோயினால் அதிகமாக பாதிக்கப்பட்ட நாடாக அமெரிக்கா பதிவாகியுள்ளது. அமெரிக்காவில் இதுவரை 4,100,875 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்காவை தொடர்ந்து பிரேஸில், இந்தியா, ரஷ்யா மற்றும் தென்னாபிரிக்கா ஆகிய நாடுகள் பதிவாகியுள்ளன. COVID - 19 வைரஸானது அமெரிக்காவிலேயே மிக வேகமாக பரவி வருவதாக ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். சீனாவின் வுஹான் நகரில் கடந்த ஜனவரி மாதம் கண்டறியப்பட்ட COVID - 19 வைரஸ் 2 மில்லியன் பேருக்கு பரவுவதற்கு 15 வாரங்கள் சென்ற நிலையில், அது 13 மில்லியனிலிருந்து 15 மில்லியனாக அதிகரிப்பதற்கு 8 நாட்கள் மாத்திரமே சென்றதாக ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.