அலாஸ்காவில் 7.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

அலாஸ்காவில் 7.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

by Bella Dalima 23-07-2020 | 4:23 PM
Colombo (News 1st) அமெரிக்‍காவின் அலாஸ்கா மாகாணத்தில் 7.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதால் அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அலாஸ்கா தீபகற்பத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் 17 கிலோமீட்டர் ஆழத்தில், அலாஸ்காவின் தெற்கு கடற்கரை நகரமான சிக்னிக்கில் இருந்து 105 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளூர் நேரப்படி இரவு 10:12 -க்கு ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் அலாஸ்கா கடற்கரையின் தெற்குப் பகுதி, அலெயுடியன் தீவுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சில இடங்களில் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். பின்னர் சுனாமி எச்சரிக்கை இரத்து செய்யப்பட்டுள்ளது. அலாஸ்கா தீபகற்பத்தில் உடனடியாக எந்தவொரு சேதமும் ஏற்பட்டதாக எந்த அறிக்கையும் இல்லை. 1964 ஆம் ஆண்டு அலாஸ்கா-அலுடியன் அகழி என்று அழைக்கப்படும் இடத்தில் 9.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. தற்போது 7.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது உலகளவில் பதிவு செய்யப்பட்ட இரண்டாவது மிக சக்திவாய்ந்த நிலநடுக்கமாக உள்ளது. அலாஸ்காவில் ஜனவரி 1 முதல் சுமார் 25,000 நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.