சிறைச்சாலைகள் அதிகாரிகள் சிலருக்கு விசேட பாதுகாப்பு

சிறைச்சாலைகள் அதிகாரிகள் சிலருக்கு விசேட பாதுகாப்பு

சிறைச்சாலைகள் அதிகாரிகள் சிலருக்கு விசேட பாதுகாப்பு

எழுத்தாளர் Staff Writer

23 Jul, 2020 | 2:02 pm

Colombo (News 1st) தெரிவு செய்யப்பட்ட சிறைச்சாலை அதிகாரிகளுக்கு விசேட பாதுகாப்பு வழங்குவதற்கு சிறைச்சாலைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் பூசா சிறைச்சாலையில் முக்கிய குற்றவாளிகள் சிலர் அதிகாரிகளுக்கு கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்தை தொடர்ந்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் பணிப்பாளர் நாயகம் துஷார உபுல்தெனிய தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பு அமைச்சின் வழிகாட்டலில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.

பூசா சிறைச்சாலையில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் இதுவரை குற்றப்புலனாய்வு திணைக்களம் மற்றும் அரச புலனாய்வு பிரிவு இணைந்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

பூசா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள முக்கிய குற்றவாளிகளான கொஸ்கொட தாரக்க மற்றும் லெசீ உள்ளிட்டோர் சிரேஷ்ட அதிகாரிகளுக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்துள்ளனர்.

குறித்த கைதிகள் உணவுத்தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்த ​போது அங்கு சென்ற சிரேஷ்ட அதிகாரிகளுக்கு இவ்வாறு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்