புனித ஹஜ் பெருநாள் ஆகஸ்ட் முதலாம் திகதி

புனித ஹஜ் பெருநாள் ஆகஸ்ட் முதலாம் திகதி

by Staff Writer 22-07-2020 | 7:48 AM
Colombo (News 1st) புனித ஹஜ் பெருநாளை எதிர்வரும் முதலாம் திகதி சனிக்கிழமை கொண்டாடுவதற்கு கொழும்பு பெரிய பள்ளிவாசலின் பிறைக்குழு தீர்மானித்துள்ளது. துல்ஹஜ் மாத தலைப்பிறையை தீர்மானிக்கும் மாநாடு கொழும்பு பெரிய பள்ளிவாசலில் ​நேற்று (21) மாலை மஃரிப் தொழுகையின் பின்னர் நடைபெற்றது. இதன்போது துல்ஹஜ் மாதத்திற்கான தலைப்பிறை தென்படாத காரணத்தினால் துல்கஃதா மாதத்தை 30 நாட்களாக பூர்த்திசெய்வதுடன், துல்ஹஜ் மாதத்தை நாளை (23) முதல் ஆரம்பிப்பதற்கு பிறைக்குழு தீர்மானித்துள்ளதாக பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது.