15 உள்நாட்டு கப்பல் நிறுவனங்கள் மீது குற்றச்சாட்டு

சூழல் பாதுகாப்பு சட்டத்தை மீறிய 15 உள்நாட்டு கப்பல் நிறுவனங்களின் அனுமதிப்பத்திரங்கள் இரத்து

by Staff Writer 22-07-2020 | 10:01 AM
Colombo (News 1st) சூழல் பாதுகாப்பு சட்டங்களை மீறி கப்பல்களில் எரிந்த நிலையில் கழிவுகளாக எஞ்சியிருந்த எண்ணெய்யை கடலில் வீசிய, 15 உள்நாட்டு நிறுவனங்களின் அனுமதிப் பத்திரங்களை இரத்து செய்துள்ளதாக சமுத்திர சூழலியல் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது. கடற்படை, பொலிஸ் சூழல் பிரிவு, கடலோரப் பாதுகாப்பு திணைக்களம் ஆகியவற்றின் அதிகாரிகளால் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் குறித்த நிறுவனங்கள் இனங்காணப்பட்டதாக சபை குறிப்பிட்டுள்ளது. முறையான கழிவகற்றலுக்காக 28 உள்நாட்டு நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளன. இந்தநிலையில், இவற்றில் பெரும்பாலான நிறுவனங்கள் முறையாக இயங்கவில்லை என சமுத்திர சூழலியல் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.