கந்தக்காடு தனிமைப்படுத்தல் முகாமில் இரு தரப்பினரிடையே மோதல்: ஐவர் காயம்

கந்தக்காடு தனிமைப்படுத்தல் முகாமில் இரு தரப்பினரிடையே மோதல்: ஐவர் காயம்

கந்தக்காடு தனிமைப்படுத்தல் முகாமில் இரு தரப்பினரிடையே மோதல்: ஐவர் காயம்

எழுத்தாளர் Staff Writer

22 Jul, 2020 | 3:41 pm

Colombo (News 1st) கந்தக்காடு தனிமைப்படுத்தல் முகாமில் சிகிச்சை பெற்று வரும் இரு தரப்பினர் இடையில் இடம்பெற்ற மோதலில் ஐவர் காயமடைந்துள்ளனர்.

குறித்த ஐவரும் வெலிகந்த முகாமில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்றிரவு மோதல் இடம்பெற்றுள்ளதுடன், தற்போது நிலைமை வழமைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தில், போதைப்பொருளுக்கு அடிமையானவர்களுக்கு புனர்வாழ்வளிக்கப்படுவதுடன், கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டவர்களுக்கிடையே இந்த மோதல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்