அமெரிக்கர்களை முகக்கவசம் அணியுமாறு கோரினார் ட்ரம்ப்

அமெரிக்கர்களை முகக்கவசம் அணியுமாறு கோரினார் ட்ரம்ப்

அமெரிக்கர்களை முகக்கவசம் அணியுமாறு கோரினார் ட்ரம்ப்

எழுத்தாளர் Staff Writer

22 Jul, 2020 | 11:53 am

Colombo (News 1st) அமெரிக்காவில் கொரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட முன்னர் மேலும் மோசமடையக்கூடும் என ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.

அமெரிக்கர்கள் அனைவருக்கும் தொற்றின் தாக்கம் இருக்கக்கூடும் என்பதால் அனைவரையும் முகக்கவசங்களை அணியுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

அத்துடன் இதனூடாக தேசபக்தியை காண்பிக்குமாறும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதனிடையே, அமெரிக்காவில் கொரோனா தொற்று குறைவடையும் எவ்வித அறிகுறியும் இல்லையென பேன் அமெரிக்க சுகாதார கழகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அமெரிக்காவில் 10 பேரில் மூவருக்கு தொற்று உள்ளதாக கழகத்தின் பணிப்பாளர் Carissa Etienne தெரிவித்துள்ளார்.

அத்துடன் பொலிவியா, ஈக்குவடோர், கொலம்பியா மற்றும் பெரு உள்ளிட்ட மத்திய அமெரிக்க நாடுகளில் தொற்று வெகுவாக அதிகரித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்