17 பொலிஸ் அதிகாரிகளுக்கு இடமாற்றம்

17 பொலிஸ் அதிகாரிகளுக்கு இடமாற்றம்

by Staff Writer 21-07-2020 | 1:42 PM
Colombo (News 1st) சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் உள்ளிட்ட 17 பொலிஸ் அதிகாரிகளுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. தேசிய பொலிஸ் ஆணைக்குழவின் அனுமதியுடன் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் இணக்கத்துடன் இந்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. சிரேஷ் பொலிஸ் அத்தியட்சகர், பொலிஸ் அத்தியட்சகர் ஒருவர், 9 உதவி பொலிஸ் அத்தியட்சகர்கள், 4 பிரதம பொலிஸ் இன்ஸ்பெக்டர்கள் மற்றும் இரண்டு உப பொலிஸ் இன்ஸ்பெக்டர்களுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. அத்தியவசிய தேவைகளுக்காக இடமாற்றம் மற்றும் நியமனங்கள் வழங்கப்படுவதாக பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.