ஷஷி வீரவன்சவிற்கு பிடியாணை

by Chandrasekaram Chandravadani 21-07-2020 | 10:21 AM
Colombo (News 1st) போலி தேசிய அடையாள அட்டையை சமர்ப்பித்து வௌிநாட்டு கடவுச் சீட்டுகளை தயாரித்த குற்றச்சாட்டின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் சந்தேக நபரான ஷஷி வீரவன்சவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு, கொழும்பு பிரதம நீதவான் லங்கா ஜயரத்ன இன்று (21) பிடியாணை பிறப்பித்துள்ளார். பிரதிவாதிகளின் சாட்சி விசாரணைகளுக்காக இன்று இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன்போது சந்தேக நபரான ஷஷி வீரவன்ச இன்று மன்றில் ஆஜராகியிருக்கவில்லை. சுகயீனம் காரணமாக மன்றில் இன்று ஆஜராக முடியாது என தொலைபேசியூடாக அவர் இன்று முற்பகல் தெரிவித்ததாக அவர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி தெரிவித்தார். எனினும் சந்தேக நபர், தமது தமது சுகயீனம் தொடர்பில் மருத்துவ அறிக்கையை சமர்ப்பிக்கவில்லை எனவும் ஏற்கனவே நடைபெற்ற விசாரணைகளின் போதும் அவர் மன்றில் ஆஜராகவில்லை எனவும் இதன்மூலம் பிரதிவாதிகளின் சாட்சி விசாரணைகளை மேலும் தாமதப்படுத்துவதை அவதானிக்க முடிவதாகவும் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் நீதிமன்றத்தில் இன்று குறிப்பிட்டார். இந்த விடயங்களை ஆராய்ந்த நீதவான், சந்தேக நபர் தமது சுகயீனம் குறித்து உறுதிப்படுத்துவதற்கு தவறும் பட்சத்தில், பிடியாணை பிறப்பிக்கப்படும் என தெரிவித்து எதிர்வரும் 18 ஆம் திகதி பிரதிவாதிகளின் சாட்சி விசாரணைகளை ஆரம்பிப்பதற்கும் உத்தரவிட்டுள்ளார்.