தனிமைப்படுத்தப்பட்டுள்ள அனைவரது வாக்குரிமையையும் ஆணைக்குழு பாதுகாக்கும்: மஹிந்த தேசப்பிரிய

by Staff Writer 21-07-2020 | 6:10 PM
Colombo (News 1st) தனிமைப்படுத்தப்பட்டுள்ள வாக்காளர்கள் வாக்களிப்பதற்கு ஏதுவாக முன்னெடுக்கப்படவுள்ள செயற்றிட்டம் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவர் மஹிந்த தேசப்பிரிய இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தௌிவுபடுத்தினார். தனிமைப்படுத்தப்பட்டுள்ள அனைவரது வாக்குரிமையையும் ஆணைக்குழு பாதுகாக்கும் என குறிப்பிட்ட மஹிந்த தேசப்பிரிய, அவ்வாறானவர்கள் பொது வாக்களிப்பு நிலையங்களுக்கு வாக்களிக்க வர மாட்டார்கள் என கூறினார். தபால் மூல வாக்களிப்பு நடைமுறையைப் போன்றதொரு திட்டத்தை அந்த வாக்காளர்களுக்காக முன்னெடுக்க எண்ணியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
முடக்கப்பட்ட இராஜாங்கனையில் சிலர் உள்ளனர். அவர்கள் இராஜாங்கனையை சேர்ந்த வாக்காளர்கள் அல்ல. அவர்கள் வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள். அவர்கள் தொடர்பில் தகவல்களை சேகரித்து தபால் மூல வாக்களிப்பில் உள்வாங்குவோம். இராஜாங்கனையில் தங்குவதற்கு நேரிட்டுள்ள வேறு பகுதிகளைச் சேர்ந்த வாக்காளர்கள் இருப்பார்களாயின், அவர்கள் தொடர்பிலான தகவல்களை அனுராதபுரம் தேர்தல்கள் அலுவலகத்திற்கு வழங்குங்கள்
என ஹிந்த தேசப்பிரிய கோரினார்.