கார்னியர் ஃபிரான்சிஸ் மீதான வழக்கு ஒத்திவைப்பு

கார்னியர் பெனிஸ்டர் ஃபிரான்சிஸிற்கு எதிரான வழக்கு விசாரணையை ஒத்திவைக்க உத்தரவு 

by Staff Writer 21-07-2020 | 1:29 PM
Colombo (News 1st) அடையாளம் தெரியாதோரால் தாம் கடத்தப்பட்டதாக பொய்யான முறைப்பாட்டை முன்வைத்த இலங்கைக்கான சுவிட்சர்லாந்து தூதரக அதிகாரி கார்னியர் பெனிஸ்டர் ஃபிரான்சிஸிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் விசாரணையை எதிர்வரும் செப்டம்பர் 8 ஆம் திகதி வரை ஒத்திவைப்பதற்கு கொழும்பு பிரதம நீதவான் லங்கா ஜயரத்ன இன்று (21) உத்தரவிட்டுள்ளார். அவரின் நண்பியான ஊடகவியலாளர் தரிஷா பஸ்டியன், சம்பவம் தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்கு தான்தோன்றித்தனமாக இடையூறு விளைவிக்கின்றமை தெரியவருமாயின், அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார். தரிஷா பஸ்டியன், ஆரம்பம் முதலே விசாரணைகளுக்கு இடையூறு ஏற்படும் வகையில் செயற்பட்டதாகவும் குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு களங்கம் ஏற்படும் வகையில் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் சுட்டிக்காட்டி, உதவி பொலிஸ் அத்தியட்சகர் மெரின் ரஞ்சித் லமாஹேவா முன்வைத்த விடயங்களை கருத்திற்கொண்டு பிரதம நீதவான் இவ்வாறு உத்தரவிட்டுள்ளார்.  

ஏனைய செய்திகள்